”அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் பேசி எந்த பயனும் இல்லை” – மோடியின் பேச்சிற்கு கனிமொழி கருத்து!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியத்தற்கு “இங்கே இருக்கும் அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் சென்று பேசி எந்த பயனும் இல்லை” என எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். உலக அகதிகள் தினத்தை…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியத்தற்கு “இங்கே இருக்கும் அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் சென்று
பேசி எந்த பயனும் இல்லை” என எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ”ஊரும் உணவும்” என்ற தலைப்பில்
புலம்பெயந்தவர்களின் உணவுத் திருவிழா சென்னை செம்மொழி பூங்காவில் தொடங்கியது. ஜூன் 24 மற்றும் 25 ம் தேதிகளில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்த பின் எம்.பி கனிமொழி, அமைச்சர் செஞ்சி
மஸ்தான், எம்.எல்.ஏ.எழிலன் ஆகியோர் முறையாக கவுண்டரில் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி வைக்கப்பட்ட உணவு வகைகளை ருசித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி பேசியதாவது:

புலம்பெயர்ந்தவர்களின் உணவை மையப்படுத்தி நமக்கெல்லாம் அவர்களின் உணவை
பகிர்ந்து அளிக்கும் வகையில் இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது. இதில் இலங்கை
தமிழர்களின் உணவு, மியான்மர் உணவு, ஆப்கான் உணவுகள் இடம் பெற்றுள்ளது.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார் என்றார்.

இதனையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பான கேள்விக்கு, ”அவர்கள் கைதட்டி வரவேற்க தான் செய்வார்கள், உண்மை என்ன, நிதர்சனம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக ஆட்சியால் மனிதர்களுக்கு இடையே வேற்றுமை ஆழமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “இங்கே இருக்கும் அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் சென்று பேசி எந்த பயனும் இல்லை” என்று பதிலளித்தார்.

நான் ஒரு கருத்தை  நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஜாதி, மத வேற்றுமைக்கு இடையே
நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அதை சரி செய்யவில்லை என்றால், இதில்
எந்த பயனும் இல்லை. இதை நான் சொல்லவில்லை தமிழ்நாடு ஆளுநர் சொல்லியது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.