முன்பு காதல் என நினைத்தது தற்போது முட்டாள்தனமாக தெரிகிறது – நடிகை கஜோல் பேட்டி!

1990களில் காதல் என்று நினைத்தவொன்று தற்போது முட்டாள்தனமாக தெரிகிறது என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி…

1990களில் காதல் என்று நினைத்தவொன்று தற்போது முட்டாள்தனமாக தெரிகிறது என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல விமர்சனங்களை கடந்தும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றிருந்தது. ராதிகா ஆப்தே. க்யாரா அத்வானி, புமி பட்னேகர், மனிஷா கொய்ராலா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நடித்திருந்த அந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வரும் ஜூன் 29-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனிடையே கடந்த 21-ம் தேதி ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி சீரிஸின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. இயக்குநர்கள் அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகிய புதிய இயக்குனர்கள் குழு இயக்கி உள்ளனர்.

இதில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோதமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அண்மையில் நடிகர் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி – 2 படத்தில் வில்லியாக நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கஜோல் நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, “தற்போது காதலின் மொழி மாறிவிட்டது. அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது. 1990களில் காதல் என்று நினைத்தவொன்று தற்போது துன்புறுத்தலாகவும் முட்டாள்தனமாகவும் தெரிகிறது. யாராவது 10 முறை வீட்டின் கதவுகளை தட்டினாலும், 15 கடிதங்கள், 30 குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் ஸ்டாக்கிங் என்பர். அதுதான் தற்போதைய நிலைமை.

சினிமாவின் வளர்ச்சி அதிகமாகிவிட்டது. உலக சினிமாக்கள் நமக்கு முன்னே எளிதாக கிடைக்கிறது. முன்னர் ஹிந்திப் படங்களை மட்டுமே பாலிவுட் மக்கள் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்களது ஒப்பீடு இங்கேயே இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. புதியதாக கற்க வேண்டும். மாற வேண்டும். இல்லையெனில் தற்காலத்துக்கு சம்பந்தமில்லாத மனிதராகிவிடுவோம்.” இவ்வாறு கஜோல் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.