கோவிட்-19  தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை; ஆய்வில் தகவல்!

கோவிட்-19  தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது முந்தைய பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. PLOS இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் , இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் (கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்) மாரடைப்பு…

கோவிட்-19  தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது முந்தைய பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

PLOS இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் , இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் (கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்) மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் டெல்லியின் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,578 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த ஆய்வு பயன்படுத்தியது.

கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனையுடன் இணைந்த மற்றும் ஆய்வுக்கு தலைமை தாங்கிய மோஹித் குப்தா பிடிஐயிடம் கூறுகையில், “இந்தியாவில் தடுப்பூசிகளின் பயன்பாடு பாதுகாப்பானது என்று எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இந்தியாவில் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாரடைப்பிற்குப் பிறகு இறப்பது குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.