காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு கூட்டம் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவுள்ள முக்கிய விஷயங்கள் குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த வியூகங்களையும், காங்., – நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா ஆலோசிக்கவுள்ளார்.
இதேபோல எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறவுள்ளது.