சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்…

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து…

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூர் சிறையில் 4 ஆண்டு தண்டனை அனுபவித்தனர். அப்போது அவர்கள் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இருவரையும் கைது செய்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.