தமிழகத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை வர வாய்ப்பே இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவியது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும்விதமாக மார்ச் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கினர். அதன்பின் கடந்தாண்டு மே மாதம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்பின் கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ஒவ்வொரு மாதமும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது தமிழக அரசு. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவ வாய்ப்புள்ளதா என அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனால், கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை பரவ வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.