சென்னை கொருக்குப்பேட்டையில் காதலி, அவரின் தாய் இருவரையும் மண்ணெண்ணைய் ஊற்றி எரித்துவிட்டு காதலனும் தீயிட்டுஉயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பூபாலன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ரஜிதா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், ரஜிதாவை திருமணம் செய்து வைக்க, அவரது குடும்பத்தினர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு ஒருவருடன் ரஜிதாவுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், மன உளைச்சலில் இருந்த பூபாலன், கொருக்குப்பேட்டையில் உள்ள ரஜிதாவின் வீட்டுக்கு, இன்று அதிகாலை காலை மண்ணெண்ணைய் கேனுடன் சென்றார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காதலி ரஜிதா, அவரது தாயார் வெங்கடம்மா ஆகியோர் மீது, மண்ணெண்ணையை ஊற்றிவிட்டு, தன் மீதும் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். இதனையடுத்து மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிப்போரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.