தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில்…

senthil balaji

தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில்
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
மின்வாரியத்தினுடைய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு
முடிந்தது. மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் ஈரோட்டில் 143 இடங்களில் மட்டும் மழையினால் பாதிப்பு ஏற்பட்டு
பதிவு செய்யப்பட்டு பின்பு சரி செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக மின் கம்பங்கள் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்
தயார் நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பிகள் 9,500 கிலோமீட்டர் தயார் நிலையில்
உள்ளது.

திருக்கோயில்களுக்கான மதுரை, ஶ்ரீவில்லிபுத்தூர் போன்ற கோயில்களில்
சுற்றியுள்ள கம்பிகளை UG (Underground) கேபிள்களாக மாற்ற 22 கோடி ஒதுக்கி
டெண்டர் விடும் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

316 துணை மின் நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் குறிப்பாக 242 துணை மின்
நிலையங்களுக்கான இடங்கள் கண்டறியப்பட்டு அதிலும் 138 துணை மின் நிலைகளுக்கான திட்ட மதிப்பீடுகள் முழுவதுமாக மதிப்பீடு செய்யப்பட்டு ஏறத்தாழ 7,525 கோடி ஒதுக்கீடு செய்து விரைவாக செய்து முடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் புதிய காற்றாடி அமைப்பதற்கான பணிகள் ஏற்பாடு செய்து அதற்கு 3,273
ஏக்கர் அரசு நிலங்கள் மின்வாரியத்திற்கு தருவதற்காக மாவட்ட ஆட்சியர்கள்
ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைப்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சித்
தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை பொறுத்த வரை நிலக்கரியை அதிகப்படுத்துவதற்கு 365 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்து நவம்பர் மாதம் பணிகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து வடசென்னை அனல் மின் நிலையம் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதத்திற்கு திறப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டில் ஏற்படும் மின் விபத்துக்களுக்கு, மின் வாரிய அலுவலகம் தான் காரணம்
என்று கருதிக்கொள்ள வேண்டாம். இருப்பினும் பாதிப்பு ஏற்படும் இடங்களில்
முன்னரே மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 67 கோடிகள் மட்டுமே. அதனால் தமிழக அரசு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை.  மின்வாரிய காலிப் பணிகளில் உள்ள குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி
மூலமாகவும் மின் வாரியத்தின் மூலம் நேரடியாகவும், நிரப்பப்படும் இவ்வாறு அவர்
கூறினார் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.