தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை -ஜடேஜா

“பணம் தான் ஒவ்வொரு வீரர்களின் ஆணவத்திற்கும் காரணம், மேலும் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கை உருவாக்குகிறது” என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசிய கருத்திற்கு,  இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா…

“பணம் தான் ஒவ்வொரு வீரர்களின் ஆணவத்திற்கும் காரணம், மேலும் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கை உருவாக்குகிறது” என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசிய கருத்திற்கு,  இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பதில் அளித்துள்ளார். 

இந்திய அணி வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது கர்வமும் வந்து விடுவதாக கபில்தேவ் கூறியதற்கு பதிலளித்த ஜடேஜா, தோற்கும் போது மட்டும் இதுபோன்ற விமர்சனங்கள் வருவதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா,  “ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்பது இருக்கக் கூடும், மேலும் அவர்களது கருத்துக்களை பகிர்வதில் முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் எந்த வீரரிடம் ஆணவம் என்பது இல்லை என நான் நினைக்கிறேன். அனைவரும் அவர்களது விளையாட்டை ரசித்து விளையாடுகிறார்கள். யாரும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒவ்வொருவரும் தங்களது 100 சதவிகிதத்தை வழங்கி வருகிறார்கள். ஆனால் இது போன்ற கருத்துக்கள் சில நேரங்களில் வருவது, இந்திய அணி தோல்வியுற்றால் மட்டுமே. இது ஒரு நல்ல அணி, நல்ல வீரர்கள் கொண்ட ஒரு குழு. ஒவ்வொருவரும் நாட்டிற்காக மட்டுமே தங்களை அடையாளப் படுத்தி விளையாடுகிறார்களே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல.” என அவர் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.