இந்தியா, பாகிஸ்தான் போட்டி மாற்றம்?

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்ற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில்…

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்ற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் திட்டபிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை  வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான்  அணி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை ஐசிசி  நிராகரித்தை தொடர்ந்து  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை அக்டோபர் 14-ம் தேதிக்கு மாற்ற வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் அன்று நவராத்திரி தினத்தையொட்டி பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளதால் மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.