தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலிலும் ஓன்று. இக்கோவிலை பொறுத்தவரை குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் வந்து செல்லும் ஒருமுக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகஇருந்துவருகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மற்றும் மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்ப திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது முன்னதாக காலை திருமுறை பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் செய்து வைத்தனர் .கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

விழா நடைபெறும் பத்து நாட்களிலும் காலையில் சாமி வாகன பவனி, இரவு வாகன வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறும் – திருவிழாவில் ஒன்பதாவது நாளான எதிர்வரும் 29 ஆம்
தேதி தேரோட்டமும், வரும் 30ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல்
அம்பாள், பெருமாள், எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறும்.
மூன்று முறை தெப்பத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

— சே. அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.