நடிகர் சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இந்தியன் 2 படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
சென்னையில் பிறந்து வளர்ந்து, மும்பையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவரான நடிகர் சித்தார்த, நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக கலைஞர் ஆவார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பணியாற்றியாவர், ஒரு ஒரே காட்சியில் மட்டும் தோன்றி நடித்திருப்பார்.
இதற்கு பிறகு, இயக்குநர் ஷங்கரிடமிருந்து சித்தார்த்துக்கு அழைப்பு வர, அந்த ஒரு அழைப்பே அவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. ஷங்கர் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைபபடத்தில் 6 பேர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனியாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்திருந்த அனைவருமே புதுமுகங்கள் என்றிருந்த போதிலும் சித்தார்த் மட்டும் தனித்து தன் அழகான நடிப்பால் அன்று பலரையும் கவர்ந்தார்.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தொடர்ந்து ஏராளமான படங்கள் தேடி ஒரு ஒரு நட்சத்திர நடிகராக, அன்றைய பல பெண்களின் கனவு நாயகராக வளம் வரத் தொடங்கினார். மீண்டும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் வெளிநாடு போகத் துடிக்கும் நவீன இளைஞனாக நடித்திருந்த சித்தார்த் பின்னர் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் பிரபுதேவா இயக்குநராக அறிமுகமான நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற திரைப்படத்தில் நடித்த சித்தாரத்திற்கு இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமின்றி பிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
தொடர்ந்து ஒரு தெலுங்கு ஹீரோ என்றே பலரும் அறியும் அளவிற்கு தெலுங்கில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முத்திரை பதித்தார். இதன் பிறகு 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா, 2015-ஆம் ஆண்டு வெளிவந்த எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை என பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டார். இன்றும் தனது கலை பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வரும் சித்தாரத் தற்போது ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியன் 2 படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதில் வரும் ஆண்டு ஒரு அற்புதமான ஆண்டாக அமையும். வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரரான, பன்முக கலைஞர் சித்தார்த்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.
Team #INDIAN2 🇮🇳 wishes Mr. Charming & multi talented #Siddharth 🤩 a Happy B'day 🥳 & a fabulous year ahead ✨
🌟 @ikamalhaasan 🎬 @shankarshanmugh 🪙 @LycaProductions @RedGiantMovies_ 🎶 @anirudhofficial 🌟 #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet @priya_Bshankar #BobbySimha 📽️… pic.twitter.com/VkBQ5SJ3nr
— Lyca Productions (@LycaProductions) April 17, 2023
- பி.ஜேம்ஸ் லிசா









