பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸில் லுவெர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு முக்கிய கலை பொருட்கள் அமைந்துள்ளன. இந்த கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு அரசர் நெப்போலியனின் 9 வைர நகைகள் இன்று கொள்ளையடிக்கப்பட்டன. இந்தத் தகவலை பிரெஞ்சு கலாசாரத் துறை அமைச்சர் ரச்சிதா தட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இன்று(அக். 19) அருங்காட்சியத்துக்குச் சென்று பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.







