முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி அருகே தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே வீடு புகுந்து தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை லெச்சம்பட்டி என்னும் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக வீடு கட்டி வாழ்ந்து வரும் தம்பதியினர் அழகுமுத்து(38), ஞானசெளந்தரி(30). 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ள அழகுமுத்து அருகிலுள்ள ஆலத்தூர் ஆயுத்த ஆடை ஆலையில் காவலராக பணியாற்றி வருகிறார். இரவு பணிக்கு செல்லும்போது அழகுமுத்து வீட்டினை பூட்டி ஒரு செட் சாவியை எடுத்து செல்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வழக்கம்போல் இரவு 9 மணியளவில், இரவு பணிக்கு சென்றவர் மனைவி குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் கதவினை பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கதவு பயங்கர் ஆயுத்தால் தாக்குவது போல சத்தம் கேட்டு விழுத்த ஞானசெளந்தரி, தனது
படுக்கையறையினை பூட்டிக்கொண்டு அக்கம்பக்கத்தினருக்கு செல்போனில்
தொடர்புக்கொண்டு தகவல் அளித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஒரு நபர் கடப்பாறைக்கொண்டு கதவினை உடைத்து கொண்டிருந்ததையும், ஒரு நபர் காவலுக்கு வாசலில் அமர்ந்திருந்தையும் கண்டு அதிர்ச்சையடைந்தனர். அருகிலிருந்த மரக்கட்டைகளை கொண்டு அந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் தாக்கியுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் இருவரும் தப்பித்து ஓடி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி தப்பித்துள்ளனர். அந்த காரில் இந்த நபர்களை தவிர்த்து மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில்
அதேபோல் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் வந்த கார், மணப்பாறை அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டு அதிலிருந்த நபர்களை விசாரணை மேற்கோண்டனர். மர்ம நபர்கள் வந்த கார், பிடிபட்ட கார் தானா என்பது குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை தொடங்கியுள்ளனர். தீரன் பட பாணியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை முயற்சி பொதுமக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்ஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து

G SaravanaKumar

இணையத்தில் வைரலாகும் ‘ப்ராஃபி’ காபி

G SaravanaKumar

தமிழ்நாடு பட்ஜெட் 2022: வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி!

Janani