வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து தீ தளபதி பாடலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி 84 மில்லியன் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான தீ தளபதி பாடலை, டிசம்பர் 4ம் தேதி விஜய்யின் 30 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக படக்குழு வெளியிட்டது.
தீ தளபதி பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று
வருகிறது. சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் வரிகள்
எழுதியுள்ளார். பாடல் பெரிய ஹிட் அடித்தாலும் தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
ஏற்கனவே வெளியான ரஞ்சிதமே பாடலுக்கும் இதே போல் ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக
வலைதளங்களில் வலம் வந்த நிலையில், இரண்டாவது பாடலான தீ தளபதி பாடலும்
காப்பியடித்தது தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ’நான் ஈ’ படத்தில் இடம்பெற்ற ’மை நேம் இஸ் நானி’ பாடல், ’வேப்பிலையாம் வேப்பில்லை’ பாடல், நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற ’வரவா வரவா’ பாடல் என பல பாடல்களை ’தீ தளபதி’ பாடலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் 1.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்களால் தீ தளபதி பாடல் ரசிக்கப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– தினேஷ் உதய்.