ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகத்திற்கு வந்த பிறகு திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்‘ படம் 100 நாட்களைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.
கோவை கே.ஜி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன், ரெட்ஜெயின்ட் மூவீஸ் நிர்வாகிகள், தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம், “கோவையில் நூறாவது நாள் விழா கொண்டாடி ஏறத்தாழ 15 வருடங்கள் ஆகியுள்ளது. இப்போது நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கமல் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது அவர் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும், நூறு ஆண்டுகள் தமிழ் சினிமா வரலாற்றில் விக்ரம் 2 தான் “டாப்மோஸ்ட் ரெக்கார்டு ப்ரேக் கலெக்சன்” எடுத்து வசூல் சாதனை படைத்துள்ளது எனவும், திரையரங்கு உரிமையாளர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
கமல் அரசியலில் இருந்தாலும், எங்கு இருந்தாலும் சினிமா அவருடைய உயிர் மூச்சு எனக் கூறிய சுப்ரமணியன், திரையரங்குகள் எந்த காலத்திலும் அழியாது எனக் கமல் கூறியதை நினைவு கூர்ந்தார். எப்படி சினிமாவை பார்த்தாலும், திரையரங்குகளில் ஆக்சன், காமெடியை பார்த்து கைதட்டி ரசிக்கும் போது இருக்கும் சந்தோஷம் எதிலும் இருக்காது.
எல்லா அதிநவீன டெக்னாலஜியும் தனது படங்களில் இருக்க வேண்டும் என விரும்பும் நடிகர் கமல் எனவும், உலக நாயகன் என்ற பெயருக்கு 100 க்கு 200 சதவீதம் பொருத்தமானவர் எனவும் கூறினார். ரெட்ஜெயன்ட் மூவிஸ் விநியோகத்திற்கு வந்த பிறகு திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது, மகிழ்ச்சியாக,நிம்மதியாக இருக்கிறோம் என கூறிய சுப்பிரமணியம், கமல்ஹாசன் கட்டாயம் வருடத்திற்கு இரண்டு படங்கள் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.









