தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிறுவனம். சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் இனிப்பு வகைகளை பால் வளத் துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், தீபாவளியன்று ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வியாபார நோக்கோடு அல்லாமல், சேவை மனப்பான்மையுடன் ஆவின் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 85 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்தது. இந்த ஆண்டு 8 விதமான இனிப்பு வகைகள் விநியோகம் செய்யப்பட்டவுள்ளது.
நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ கத்திலி, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுகர்லெஸ் பொருட்களுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. தனியார் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் 20% குறைவாக உள்ளது. நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என்று குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
4.5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கிறது ஆவின் நிறுவனம். வருடம் வருடம் விலைவாசி ஏறுகின்றது. எல்லா பொருட்களும் விலை ஏறியுள்ளது. ஜி எஸ் டி போடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆவின் கடையில் பஜ்ஜி சுட்டு கூட விற்கிறார்கள். சிக்கன் 65 கூட விற்ற கடைகளை மூடியிருக்கிறோம். ஆவின் பொருட்களையே விற்க வேண்டும். ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு ரூ. 85 இலட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது.
விற்பனை விலையைவிட அதிகம் விற்கக் கூடாது, விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசீலித்து அறிவிப்பார். அதைத்தொடர்ந்து, இனிப்புகளை அறிமுகம் செய்துவைத்து உண்டதுடன், மற்றவர்களுக்கும் அளித்தார்.
-ம.பவித்ரா








