சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்…

சூலூர் அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில்…

சூலூர் அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சேலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி பணிபுரிந்து வந்தார். சகோதரருடன் ஊருக்கு செல்ல சென்றபோது திடீரென காதலருடன் மாயமானார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றித்திரிந்த இருவரையும் போலீசார் பிடித்தனர்.

சிறுமியை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார் இளைஞர் தாமரைக்கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காதலனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற சிறுமியின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.