வேளச்சேரி அருகே நடைபெற்ற பிரத்யேக திருமண கண்காட்சி விழாவில் நடிகர் பரத், நடிகை வாணி போஜன் ஆகியோர் கலந்து கொண்டு அங்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மெர்கெட்டிசிட்டியில் திருமண ஆடைகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பரத், நடிகை வாணி போஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் மாலின் மான்யவர் மற்றும் மோஹே, கலானிகேதன், பிளாக்பெர்ரிஸ், ஸ்வா டயமண்ட், மெல்லே, கிவா, கிரையோலன், ஆஸ்ட்ரியா ஆகிய சொகுசு பிராண்டுகளின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆண்களும், பெண்களும் ஒய்யரமாக நடந்து வந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பரத், புதிய திருமண ஆடை பேஷன் ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போன்ற நடிகர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதால், மக்களிடையே எளிதாக இந்த நிகழ்வுகளை கொண்டு செல்லவும் உதவுகிறது. வரும் 20ஆம் தேதி தான் நடித்த லவ் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு நடைமுறையில் நடக்கக்கூடிய பல சுவாரசியமான விஷயங்கள் இப்படத்தில் உள்ளதாகவும், கண்டிப்பாக அனைவரும் திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்க வேண்டும் எனவும் கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா








