முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவின் 100 நாட்கள் சாதனை குறித்து அண்ணாமலை விமர்சனம்

திமுகவின் 100 நாட்கள் சாதனை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கவனம் முழுவதும் 3 வது அலையை தடுப்பதற்கான நடவடிக்கையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் 100 நாட்கள் சாதனை என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் கொண்டதாக உள்ளது. கொரோனா 2-வது அலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டது இனிப்பு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவில்லை, ஒன்றிய அரசில் ஆரம்பித்து நிறைய தேவையில்லாமல் பேசியது, பாஜக தொண்டர்களை கைது செய்துள்ளது இது தான் கசப்பு, காரம் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

“தமிழ்நாட்டில் இன்னும் ஒரே வாரத்தில் கொரோனா இல்லாத சூழல் உருவாக்கப்படும்”

Gayathri Venkatesan

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

Gayathri Venkatesan

பணிக் காலம் நிறைவு: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு முக்கிய பதவி!

Jeba Arul Robinson