உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, போட்டி தொடங்கியுள்ளது.

மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்தது. இந்த நிலை​யில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, போட்டி தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது.

இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதில் வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு உள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்​கேற்க தமிழகம் முழு​வதும் இருந்து 6,500 காளை​கள் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன. அதில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்​கப்​பட்​டுள்​ளது. 550 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்​கு​கின்​றனர்.

போட்​டி​யில் அதிக காளை​களை அடக்​கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள சொகுசு காரும், சிறந்த காளை​யின் உரிமை​யாள​ருக்கு டிராக்​டரும் பரி​சாக வழங்​கப்​படு​கிறது. 2-ம் பரிசு பெறும் மாடு​பிடி வீரர், காளை​களுக்கு பைக்​கு​களும் பரி​சாக வழங்​கப்பட உள்​ளன. இதைப் பார்ப்​ப​தற்​காக உலகின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள், தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மூலம் பதிவு செய்​துள்​ளனர். தென் மண்டல ஐ.ஜி. மற்​றும் மதுரை காவல் கண்​காணிப்​பாளர் தலை​மை​யில் 3 ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படுவதையும், காளைகளை வீரர்கள் அடக்குவதையும் காண்பதற்காக பிரத்யேக மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.