சென்னையில் அமைச்சர் உதயநிதியிடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று பெண்கள் திடீரென கோரிக்கை வைத்ததால் பரபரப்பு நிலவியது.
இந்தி திணிப்பை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமானது ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து தமிழ் மொழிக்காக சிறையிலேயே தங்கள் உயிரை நீத்த மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன், தர்மாம்பாள் ஆகியோர்களது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியாக நடந்து சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இதனருகே உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியான டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த அமைச்சர் உதயநிதியை மூலக்கொத்தளம் இடுகாட்டு பின்புறத்தில் உள்ள பெண்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி திடீரென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தரக்கோரிவும் கோரிக்கை வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர்.