காரை தவறான பாதையில் ஓட்டிய பெண் | தடுத்து நிறுத்திய காவலரை திட்டும் வீடியோ இணையத்தில் வைரல்!

காரை தவறான பாதையில் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய காவலரை அப்பெண் திட்டும் வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒரு பெண் தனது சொகுசு ஜாகுவார் காரில் சென்று கொண்டிருந்தார். …

காரை தவறான பாதையில் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய காவலரை அப்பெண் திட்டும் வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒரு பெண் தனது சொகுசு ஜாகுவார் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த பெண் தவறான திருப்பத்தை எடுத்து தவறான பக்கத்தில் ஓட்ட ஆரம்பித்தார்.  அப்போது சிக்னலில் நின்றிருந்த காவலர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார்.  ஆனால் அப்பெண் தன் தவறை ஏற்றுக் கொள்ளாமல்,  காவலரை திட்ட ஆரம்பித்தார்.  இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

காவலர் காரை நிறுத்தியதும்,  அந்த பெண், காவலரை அலட்சியம் செய்து காரை நகர்த்தத் தொடங்கினார்.  அப்போது அவர் கட்டாயப்படுத்தி காரை நிறுத்தினார்.  தவறாக ஓட்டிய பிறகும் அந்த பெண் காவலரை திட்டியுள்ளார்.  இதன் போது அங்கு கூட்டம் அலைமோதியது.

“நான் தவறான திசையில் நடப்பது எனக்குத் தெரியும் என்று அவர் கத்தினார்.  ஆனால் அதற்கு என்ன?. பலர் தவறான பாதையை பின்பற்றுகின்றனர்” என அந்த பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்தார்.  அந்த பெண் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, நெரிசல் மிகுந்த சந்திப்பில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/1762021809753620493?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762021809753620493%7Ctwgr%5E4dd039484b7006f924e112925134e5c2e525337a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Ftelangana-traffic-cop-allegedly-attacked-by-woman-driving-jaguar-in-wrong-direction-in-banjara-hills-video-goes-viral-5784512.html

 

ஒரு பெண் ஒரு சந்திப்பின் நடுவில் ரகளை உருவாக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த பெண்ணின் நடத்தைக்கு சமூக வலைத்தள பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.