‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யுவன் ஷங்கர் ராஜா இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், யுவன் பிஜிஎமில், தீம் மியூசிக் மிரலவைக்கும்படியாக அமைந்துள்ளது.
நீண்ட நாட்களாக காத்திருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, இன்னும் கொஞ்சம் தூண்டும் வகையில், பல்வேறு தோற்றங்களில் நடிகர் அஜித் தோன்றுவது தீம்யை வெற்றியடைய செய்யலாம். தீம் வெளியான சில மணி நேரத்தில், 6,46,665 பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.