சீரும் சிறப்புமாக நடைபெற்ற காமெடி நடிகரின் மகள் திருமணம்!

பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்த காமெடி நடிகர் மகளின் திருமணம்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சமீப நாட்களாக காமெடி நடிகர் கிங்காங் அரசியல் தலைவர்களோடு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது.

சினிமாவில் கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமானவர் தான் ஏ. சங்கர். காலப்போக்கில் கிங்காங் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.

கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சிவகார்த்திகேயன் வரை பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

இவர் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசனன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் நடிகர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.