முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மதவெறி கும்பல் நடத்தும் வன்முறை அதிர்ச்சியளிக்கிறது ; சீமான்

கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச் செயல்கள் தமிழ்நாட்டில் தலை தூக்காமல் தடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் இஸ்லாமிய மார்க்கத்தின்படி உடையணிந்து பெண்கள் கல்லூரிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து, மதவெறி கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். மாணவர்களின் மனங்களில் மதவாத பரப்புரையை விதைத்து, மத மோதலுக்கு வித்திடுவது கடும் கண்டனத்திற்குரியது எனவும் மதவாதத்தைத் தூண்டி விட்டு, நாட்டைக் கூறுபோட நினைக்கும் பாஜக ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகளைத் தீர்க்காமல், மதவாத அரசியலைக் கையிலெடுக்கும் பாஜகவின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கது என விமர்சித்துள்ள சீமான் , கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச் செயல்கள் தமிழ்நாட்டில் தலை தூக்காமல் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள்- பிரதமர் வாழ்த்து

G SaravanaKumar

அம்மா உணவகம்: அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்

Halley Karthik

பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!

Saravana