யுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவில் இருந்து  மீண்டும் விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ்,

”பாலஸ்தீன அரசை ஒரு உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்வது” என்ற யுனெஸ்கோவின் முடிவு  அமெரிக்க கொள்கைக்கு முரணானது. மேலும் யுனெஸ்கோவிற்குள் இஸ்ரேலுக்கு எதிரான இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர்  கூறியுள்ளார்.

யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்க விலகுவது இது முதன்முறை அல்ல.  1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது முதன் முறையாக அமெரிக்க யுனெஸ்கோவில் இருந்து விலகியது. பின்னர் 2003 ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது மீண்டும் இணைந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது  யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் யுனெஸ்கோவில்  இணைந்த நிலையில், தற்போது அமெரிக்கா மீண்டும் விலகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.