தவெக அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல்…!

தவெக சார்பில் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸிடம் ஐந்து இடங்கள் உள்ளன.

இந்த சூழலில், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமைக்கோரி கடிதம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உட்பட தவெக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த சூழலில் தவெக சார்பில் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலின் படி,  புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல்குமார், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன், கல்லாணை, விஜயலட்சுமி, பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜேடிசி பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், தமிழன் பார்த்திபன் ஆகியோர் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.