பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்..!

கோவாவில் இருந்து, மேற்கு வங்காளம் கால்டியா துறைமுகம் செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்திருந்த இழுவை கப்பல் ஒன்று அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றது. பாம்பன் ரயில் தூக்குப் பாலம் ராமேஸ்வரம்…

கோவாவில் இருந்து, மேற்கு வங்காளம் கால்டியா துறைமுகம் செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்திருந்த இழுவை கப்பல் ஒன்று அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நடைபெற்று வந்தது. பயண நேரத்தை குறைக்கவும், எரிபொருளை சிக்கனத்திற்காகவும், பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் இருந்து இழுவை கப்பல் ஒன்று மேற்கு வங்காளம் கால்டியா துறைமுகம் செல்வதற்காக பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் இழுவை கப்பல் நங்கூரமிட்டு காத்திருந்தது. இதையடுத்து கப்பல்கள் கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் பாம்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இழுவைக்கப்பல் பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டு மேற்குவங்காளம் கால்டியா நோக்கி சென்றது. அப்போது இழுவை கப்பலை தொடர்ந்து மீன்பிடி தடை காலம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாள், அதற்கு முன்பாக மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மண்டபம் வடக்கு பகுதி துறைமுகத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.