வெற்றிமாறனின் விடுதலை பட ட்ரெய்லர் 2.6 கோடி பார்வைகளை கடந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.என்ட்ர்டெய்ன் மெய்ன்ட், கிராஸ்வுட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள படம் விடுதலை (பாகம்-1). நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயின்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: RRR படத்தை பிரதமரே இயக்கியது போல் பெருமைப்படக் கூடாது – மல்லிகார்ஜூன கார்கே
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தில் இடம்பெற்றிருந்த 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடையே இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. 2:47 நிமிடங்கள் கொண்ட அந்த ட்ரெய்லருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளியான 5 நாள்களில் விடுதலை யூடியூபில் ட்ரைலருக்கு சுமார் 2.6 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 3.54 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து 7வது இடத்தில் (#7 on Trending) உள்ளது. ட்ரெய்லரை பார்த்த பெரும்பாலானோர் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து கமென்ட் செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா