ஆஸ்கர் விருது பெற்ற RRR படத்தை பிரதமரே இயக்கியது போல் பெருமைப்படக் கூடாது என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியபோது, ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழு மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் இருவருக்கும் என் வாழ்த்துகள். இரண்டு விருதுகளுமே தென் இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி அதில் அவர்கள் அதிகம் பெருமை கொள்வார்கள். நானும் பெருமை கொள்வேன். நீங்களும் பெருமை கொள்ளலாம். மேலும், இது இந்தியாவுக்கான பெருமிதம்.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருது வென்ற “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” – ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
ஆனால், எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் உள்ளது. அதாவது, ஆளும் கட்சி நாங்கள்தான் பாடலை எடுத்தோம், நாங்கள் தான் பாடலை எழுதினோம், பிரதமர் மோடி தான் RRR படத்தை இயக்கினார் என ஆளும்கட்சி Credit எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்தப் பேச்சால் அவைத் தலைவர் உட்பட மொத்த அவையும் சிரிப்பலையில் மூழ்கியது.
-ம.பவித்ரா








