‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரைலர் வெளியானது!

ஆர்ஜூன் இயக்கத்தில் நடிகர் மிர்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான…

The trailer of the movie 'Soodhu Kavvum 2' has been released!

ஆர்ஜூன் இயக்கத்தில் நடிகர் மிர்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. இப்படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் நடிகர் மிர்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜாலியான கேங்க்ஸ்டர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று (டிச. 3) இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது. டிரைலர் வெளியான 3 மணி நேரத்தில் 1,50,000 பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இணையத்தில் இந்த டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.