DC காமிக்ஸின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான தி ஃப்ளாஷ் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
எஸ்ரா மில்லர் நாயகனா நடித்துள்ள இந்தத் திரைப்படம், DC எக்ஸ்டெண்டட் யுனிவர்ஸின் கடைசி ஃப்ளாஷ் படமாக இருக்கலாம் எனவும் இதில் கேமியோக்களாக வரும் சில நட்சத்திர நடிகர்களுக்கும் கடைசிப் படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
DC காமிக்ஸில் உள்ள ஃப்ளாஷ் பாயிண்ட் கதைக்களத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறு வயதில் இருக்கும் போது இறந்து போன தனது தாயைக் காப்பாற்றச் செல்லும் நாயகன் கவனக்குறைவாக சில தவறுகள் செய்து தனது யுனிவர்ஸை குழப்பி விடுகிறார். இதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்த ஃப்ளாஷ் படம் உருவாகியிருப்பதாக டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.
இந்த படத்தின் மிக பெரிய எதிர்பார்ப்பே இந்த படத்தில் வரும் பேட்மேன் கதாபாத்திரங்கள் தான். குறிப்பாக மைக்கேல் கீட்டன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பு.
ஜேம்ஸ் கன் டிசி ஸ்டுடியோவைக் கைப்பற்றியதால், முன்பு இருந்த DC காமிக்ஸில் படங்களின் தொடர்ச்சிகள் இந்த படத்துடன் முடிவுக்கு வருகின்றன. இப்படம் ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் DC ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.







