அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக சார்பில் தேர்தல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே.சிங், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
மூன்றாவது அணி, பாஜகவை பலவீனப்படுத்தாது என குறிப்பிட்ட எல். முருகன், சட்டப்பேரவையில் பாஜகவினர் இரட்டை இலக்கத்தில் இடம்பெறுவர் என தெரிவித்தார்.







