விக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்!

விக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ரஷ்யாவில் நடக்கும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு, ரஷ்யாவில் இப்போது நடந்து வருகிறது.…

விக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ரஷ்யாவில் நடக்கும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு, ரஷ்யாவில் இப்போது நடந்து வருகிறது. இதற்காக, விக்ரம் உள்ளிட்ட ’கோப்ரா’ படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். இந்நிலையில், இதில் வில்லனாக நடிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ரஷியா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பை நடத்திவிட்டு படக்குழு சென்னை திரும்புகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.