பராசக்தி படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து நியூ அப்டேட்…!

பராசக்தி  திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’நமக்கான காலம்’ நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அமரன், மதராஸி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பின.

இந்த நிலையில் தற்போது சிவாகர்த்திகேயன் இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொராவின் இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில்  நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு  பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பராசக்தி படத்திலிருந்து இதுவரை வெளியான ’அடி அலையே’, ’ரத்னமாலா’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது பராசக்தி  திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ’நமக்கான காலம்’ புரொமோ நேற்று வெளியானது. இந்த நிலையில் இப்பாடல் நாளை (டிசம்பர் 14)  மாலை 6 மணிக்கு  வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.