INTENSE காட்டும் ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர்….!

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். தற்போது டொவினோ தாமஸ் ‘பள்ளிச்சட்டம்பி’ என்னும் புதிய படத்தில்  நடித்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜாய் இயக்கும் இப்படத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.