முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

இலங்கையில் உள்நாட்டு கலவரத்தால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அதற்கு தமிழர் ஒருவர்தான் உதவிகளை செய்ததாக லங்கா மிரர் என்ற இலங்கை இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கஜானாவில் அமெரிக்க டாலர்கள் குறைந்து வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இலங்கை பெரும் நெருக்கடி நிலைக்குச் செல்லும் என்று அந்நாட்டு உளவுத்துறை ராஜபக்சே சகோதரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் கோத்தபய உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிடும் என்றும் அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதனை அடுத்தே கடந்த டிசம்பர் மாதம் மகிந்த ராஜபக்ஷ, தனியார் ஜெட் விமானம் மூலமாக திருப்பதி சென்றார். அந்த விமானத்தில் அவர் குடும்ப உறுப்பினர்கள் தங்க நகைகள், மற்றும் பெரும் அளவிலான பணத்தை எடுத்துச் சென்றதாக லங்கா மிரர் என்னும் இணையதளம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 2021 இல் இருந்து ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த சரவணன் என்ற தமிழர், ராஜபக்ஷ குடும்பத்தோடும் மிக மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

சமீபத்தில் அவரே இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபபய நாட்டை விட்டு தப்பிக்க, தனியார் ஜெட் விமானத்தை கொழும்பு அனுப்பியதாக அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த விமானத்தில் கோத்தபய ஏற, அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் பின்னர் அவர் ராணுவ விமானம் ஒன்றில் ஏறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்கே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த நாடும் சீர்குலைந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பசி பஞ்சத்தில் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் பொருளாதாரச் சரிவுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். தொடர்ந்து மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததுடன் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்து வந்தார், இதனால் ஆத்திரமடைந்த இலங்கை மக்கள் பிரதமர் வீடு அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீக்கிரையாக்கினர்.

யார் இந்த சரவணன்?

இலங்கையில் 2021 இருந்து கடுக்காய், ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த சரவணன் என்ற ஒரு தமிழர் ராஜபட்ச குடும்பத்தோடு மிக நெருக்கமாக இருந்து வந்தார் என்றும், சமீபத்தில் அவர் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிக்க தனியார் ஜெட் விமானத்தை கொழும்புக்கு அனுப்பியதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கோத்தபய ராஜபக்சே ஏற அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்காததால், பின்னர் அவர் ராணுவ விமானத்தில் ஏறி மாலத்தீவு சென்றதாகவும் செய்திகள் கூறப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் பணம் திருப்பதி, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஹவாலா பணமாக போலி நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்துள்ளதாகவும், ராஜபக்சேவின் பினாமியாக சரவணன் மற்றும் அவரது நண்பர் விஜய் செயல்படுவதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சரவணன் ,கூகுள் குட்டப்பா என்ற படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாறுகிறது குடிசை மாற்று வாரியம்

Halley Karthik

முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு

G SaravanaKumar

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம்: திருமாவளவன் வரவேற்பு

Web Editor