காதலிக்க மறுத்த மாணவி; எரித்து கொலை செய்த இளைஞன்

ஜார்க்கண்டில் காதலிக்க மறுத்ததால் இளைஞன் தீவைத்ததில் படுகாயம் அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் தும்காவில், கடந்த 23 ஆம் தேதி காதலை ஏற்க மறுத்ததால் 12ம்…

ஜார்க்கண்டில் காதலிக்க மறுத்ததால் இளைஞன் தீவைத்ததில் படுகாயம் அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில், கடந்த 23 ஆம் தேதி காதலை ஏற்க மறுத்ததால் 12ம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரிக்கு, ஷாரூக் என்ற இளைஞர் தீவைத்தார். இதில் படுகாயமடைந்த சிறுமி அங்கிதா குமாரி, புலோ ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றாப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி அங்கிதா குமாரி உயிரிழந்தார். இதையடுத்து, ஷாரூக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தும்காவில் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவிக்கு தீவைத்தது தொடர்பாக, சம்பவத்தன்றே ஷாரூக் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.