கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்

கேரளாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தற்காலிக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பூங்கோடு என்ற இடத்தில் நேற்றிரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று…

கேரளாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தற்காலிக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பூங்கோடு என்ற இடத்தில் நேற்றிரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று நடந்தது. அப்போது அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பார்வையாளர் மடம் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் போட்டியின் போது அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கால்பந்து போட்டி நடத்தியவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பார்வையாளர் மாடம் சரியான முறையில் அமைக்கப்படாததே விபத்து ஏற்பட காரணம் எனவும் கூடுதல் எடை தாங்காமல் சரிந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.