முக்கியச் செய்திகள் தமிழகம்

கனவில் அடிக்கடி பாம்பு; பரிகார பூஜையால் பறிபோன நாக்கு

ஈரோடு அருகே கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், பரிகாரம் செய்யப் பாம்பிடம் நாக்கை நீட்டியவரின் நாக்கை கடித்த பாம்பு. என்ன நடந்தது ?

ஈரோடு அருகே 54 வயது மதிக்கத்தக்க அரசு அதிகாரி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனையிடம் கூறியுள்ளார். இதையடுத்து கணவன் -மனைவி இருவரும் இதுகுறித்து ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த ஜோதிடரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்யுமாறு ஆலோசனை வழங்கி உள்ளார். இதன் பேரில் அந்த பூசாரியை அணுகிய போது, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்துள்ளார். பூஜையின் இறுதியில், பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யக் கூறியுள்ளார்.

இதனை நம்பி அதிகாரி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்டக் கொடிய விஷமுடைய பாம்பு அவரின் நாக்கை திடீரென கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து அதிகாரியின் நாகை அறுத்துள்ளார். இதில் நாக்கு துண்டாக அதிலிருந்து அதிகளவு ரத்தம் வெளியேறி அரசு அதிகாரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு 4 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அவர் தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவு

EZHILARASAN D

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Halley Karthik

தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Gayathri Venkatesan