தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்காண 62வது அகில இந்திய
கூடைப்பந்தாட்ட போட்டி மே 15 ல் துவங்கியது. முதல் நாள் முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் உடுமலைப்பேட்டை கூடைப்பந்தாட்ட கழக அணியும் விளையாடியதில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67 க்கு 49 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
மேலும் இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி போடிநாயக்கனூர் கூடைப்பந்தாட்ட
அணி மற்றும் திருநெல்வேலி கூடைப்பந்தாட்ட அணியும், மூன்றாவது போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிரீன் அணியும் திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணியும், நான்காவது போட்டியில் சென்னை TNBA TRW அணியும் கம்பம் பென்னிகுவிக் கூடைப்பந்தாட்ட அணியும் களத்தில் விளையாட உள்ளனர்.
மேலும் இந்த போட்டியானது நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற உள்ளது.
இதில் இந்தியாவின் தலைசிறந்த அணிகளான இந்திய கப்பல் படை அணியும், இந்திய விமானப்படை அணியும், இந்திய எண்ணெய் எரிவாயு கழக அணியும், பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணி உள்ளிட்ட 21 அணிகள் இந்தக் கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூடைப்பந்தாட்ட போட்டியானது வருகிற 21 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசு 50.000 ரூபாய் ரொக்க பரிசும் சுழற் கோப்பையும், இரண்டாவது பரிசு 40.000 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாவது பரிசு 30.000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பையும் நான்காவது பரிசு 20.000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
-ரெ.வீரம்மாதேவி







