குங்குமம் வைக்கும்போது ஏற்பட்ட கை நடுக்கம் – மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் கல்யாணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருமணத்தில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த மணமகள் சட்டென திருமணத்தை நிறுத்த கோரியுள்ளார். அதன் காரணமாக அடுத்தடுத்து நடக்கவிருந்த திருமணம் தொடர்பான நிகழ்வுகள் அப்படியே நிறுத்தப்பட்டு இறுதியாக திருமணம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியில் உள்ள போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி, திருமணத்தை நடத்த முயற்சித்துள்ளனர். இருப்பினும் மணமளின் பிடிவாதத்தால் சமாதானப் பேச்சும் சுமூகமாக நடைபெறவில்லை. அதனால் கடைசி வரை மணமகனை மணக்க அப்பெண் மறுத்து விட்டார்.

இதையடுத்து மணமகனின் தந்தை, திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை திருப்பி தர கோரி மணமகள் வீட்டாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்வம் தொடர்பாக இரு வீட்டாரும் புகார் அளிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.