“சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு” – கனிமொழி

இஸ்லாம் மதத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என்ற தீர்பு சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிள் மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையையே உறுதி செய்து அதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இஸ்லாம் சமயத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகளால் ஏற்பட்ட பிற்படுத்தப்பட்டத் தன்மையை அளவிட மதத்தை தேர்வு செய்யும் உரிமை ஒரு நிபந்தனையாக இருக்க கூடாது; தவெக அரசு இந்த விவகாரத்தில் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளை உறுதியாக தொடர வேண்டும். மதம் மாறிய மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும்” இன்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.