ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தன

ஒருமித்த கருத்துடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து பயணிக்க தயார் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   பாமக சார்பில் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அன்புமணி…

ஒருமித்த கருத்துடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து பயணிக்க தயார் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

பாமக சார்பில் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அன்புமணி ராமதாஸ், வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பணத்தை வாரி இறைத்ததாக குற்றம்சாட்டினார். இனி வரும் தேர்தலில் கட்சி சின்னத்தை தவிர்த்து, அனைவருக்கும் சுயேட்சை சின்னம் கொடுத்தால் தான் மக்கள் பணத்துக்கு வாக்களிகக் மாட்டார்கள் என கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்ற வெற்றியால் மட்டுமே, 3-வது பெரிய கட்சியாக பாஜக வந்துள்ளதாக கூறிய அவர், தங்களின் நோக்கம் பாஜக வுடன் ஒப்பிடுவது அல்ல எனவும். இருவரும் வேறு பாதையில் செல்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

 

மேலும் , சென்னையில் வாக்களிக்காத மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என சாடிய அன்புமணி ராமதாஸ், வசதிகளுக்காக கேள்வி கேட்கும் சென்னை மக்கள், ஜனநாயக கடமையாற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ஒருமித்த கருத்துடைய யாராக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து பயணிக்க தயார் என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.