நல்லாட்சிக்கு, மாவட்ட நிர்வாகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரமதர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நல்லாட்சிக்கு மாவட்ட நிர்வாகங்களின் பங்கு மிகவும் முக்கிமானது என தெரிவித்தார். அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உதவி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அரசின் திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை கண்டறிய, மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வு மேற்கொள்வதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய கள ஆய்வுகளை மேற்கொள்வதில் விரிவான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








