சட்டவிரோதமாக எல்லையை கடக்க யாரும் முயலக்கூடாது: கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் பனியில் உறைந்து இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள்,…

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் பனியில் உறைந்து இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நடந்தே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஒரு குழந்தை உள்பட 4 பேர், பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதி வழியாக பயணித்துள்ளனர். அப்போது, உறை பனியில் சிக்கி அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு குழந்தை உள்பட 4 இந்தியர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் மனதை வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவித்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதுபோல், சட்டவிரோதமாக எல்லையை கடக்க யாரும் முயலக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.