ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.30 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டு கும்பல் தூக்கி சென்றுள்ளது.
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், துணிகர கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.
அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் அருகே இருக்கும் சிசிடி கேமராவில், ஏடிஎம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர்.







