சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை ஐபிஎல் தொடரில் சென்னை அணி உருவாக்கப்பட்டது முதலே தோனி தான் வழிநடத்தி வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தது முதலே, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு தோனி தலைமை ஏற்ப்பது, அவரது ரசிகர்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.
தல என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்கு மட்டும் அல்ல, சென்னை அணிக்கும் சிறப்பான கேப்டனாக மற்றும் பினிசராக செயல்பட்டு வழிநடத்தி வருகிறார்.
இளம் வீரர்கள் முதல், மூத்த வீரர்கள் வரை எல்லாரோலும் முன் உதாரணமாக பின்பற்றக்கூடிய வகையில் செயல்படும் தோனியின் ஹைக்கூ பவருக்கு மயங்காத யாரும் இல்லை.
தனது ஹிட்டிங் பவரில், கிரவுண்டில் தான் அடிக்காத மூலையே இல்லை என சொல்லும் அளவிற்கு, துல்லியமான பிளேஸ்மென்ட் திறனுடன், ஆட்டத்தை கணித்து ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த நபர்தான் மகேந்திர சிங் தோனி.
தோனி ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், சென்னை அணியின் கடைசி போட்டி விளையாடும் போது தோனியிடம், அவரது ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் கேட்கிற கேள்வி மிக முக்கிய பங்கு வகிக்கும்.
அதாவது, அடுத்த தொடரில் நீங்கள் விளையாடுவீர்களா என்ற கேள்வி தான் அது…
அந்த கேள்விக்கு, தோனியிடம் இருந்து பதில் வரக்கூடிய தருணத்திற்கான இடைவெளியில், ஒவ்வொரு ரசிகரின் இதயமும் ஒரு நொடிக்கு மூன்று முறை வேகமாக துடிக்கும். தோனியின் பதிலை கேட்ட பின்னும் மேலும் வேகமாக துடிக்க கூடும் என்பது, அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அது என்ன பதிலாக இருக்கும்?
அடுத்த தொடரிலும் நான் விளையாடுவேன் என்ற பதில் தான் அது. கடந்த இரண்டு தொடர்களிலும் தோனியிடம் இருந்து எதிர்பார்க்க பட்ட முக்கிய பதிலாக பல்வேறு இடங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டி துவக்கத்தில் டாஸ் போடப்படும் போது, தோனியிடம் இதுகுறித்து கேட்கப்படும் என உணர்ந்த ரசிகர்கள் தோனியின் வருகைக்காக காத்திருக்க, டாஸ் போடப்பட்டது.
வழக்கம் போல அனைவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க அந்த கேள்வியும் கேட்கப்பட்டது. தோனி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் அது அமைந்தது.
மகேந்திர சிங் தோனி அடுத்த தொடரிலும் சென்னை அணிக்கு தான் தலைமை ஏற்பதாக அறிவித்தது, மைதானம் மட்டும் அல்லாது, தொலைகாட்சி வாயிலாக பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு ரசிகரின் வீட்டிலும் ஆரவாரத்த்தை தூண்டியது.
மீண்டும் சென்னை அணியை தலைமை ஏற்க்கும் தோனியின் ஓய்வை கேட்க தயாராக இல்லாத ரசிகர்களுக்கு, பெரும் விருந்தாக அமைந்த தோனியின் பதில், தற்போது அனைத்து ஊடகங்களிலும் தீயாய் பரவி வருகிறது.
எது என்னவாக இருந்தாலும், தோனியின் சாமர்த்தியமான தலைமை பண்பும், போட்டியின் போது அவரது intelligence உம் தான் அவர் மீது அவரது ரசிகர்களுக்கு காதல் கொள்ள நேர்ந்தது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
என்றாவது ஒரு நாள் தோனி ஐபிஎல் தொடரிலும் ஓய்வு அறிவிக்க போகிறார், ஆனால் அவரது ரசிகர்கள் தோனியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எதிர்நோக்கி கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.










