நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாகவே இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.
இதனைதொடர்ந்து, தற்பொழுது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா’ பாடல் ஜூலை 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.








